வைரஸால் சில பெண்டிரவில் பைல்கள் காணாமல் போய் இருக்கும் அதை மீட்கலாம்
மெமரியில் பார்த்தால் பைல் இருப்பது போன்றும் திறந்து பார்த்தால் அது வெற்று போல்டராக இருக்கும். இதை சரி செய்ய , 1. பெண்டிரைவை கணினியில் மாட்டிக்கொள்ளவும் . 2. start-க்கு சென்று run பாக்ஸில் cmd என டைப் செய்க enter பட்டனை அழுத்தவும். 3. இப்போது கமண்ட் பிரமெண்ட் திறக்கும். 4.அதில் எந்த டிரைவை சோதிக்க வேண்டுமோ அதை டைப் செய்க. அதாவது பெண்டிரைவ் F-டிரைவ் என்றால் F: என்று கொடுக்கவும். பின்பு attrib -s -h /s /d *.* என்று சரியாக இடைவெளியுடன் டைப் செய்து enter பட்டனை அழுத்தவும். சில வினாடியில் உங்கள் எல்லா பைலும் வந்திருக்கும்.
|